செய்திகள்
முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

Jan 12, 2025 - 11:29 AM -

0

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்.


அவர் நேற்று இரவு (11) காலமானார், மரணமடையும் போது அவருக்கு 98 வயதாகும்.


1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், 1993 வரை 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.


1977 முதல் 1989 வரை கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த  இந்திரதாச ஹெட்டியாராச்சி, வயதில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் விளங்கினார். 


அன்னாரின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (13) இரவு முதல் ஹேனேகம, பொகுனுவிட்டவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05