உலகம்
போப் பிரான்சிஸ்க்கு அமெரிக்காவின் 'Medal of Freedom' விருது

Jan 12, 2025 - 01:04 PM -

0

போப் பிரான்சிஸ்க்கு அமெரிக்காவின் 'Medal of Freedom' விருது

அமெரிக்க ஜனாதிபதியின் அதியுயர் 'Medal of Freedom' விருது போப் பிரான்சிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக அந்த உயரிய விருதை வழங்கியுள்ளார்.


ஜனாதிபதி பதவியில் ஒரு வாரத் தவணை மீதமிருக்கும் நிலையில், இறுதி வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்று பதக்கத்தை நேரில் வழங்க பைடன் திட்டமிட்டிருந்தார்.


கலிபோர்னியா காட்டுத்தீத் தடுப்பு நடவடிக்கையில் அவதானம் செலுத்துவதால் ஜோ பைடனின் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.


ஏழை மக்களுக்குச் சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பைடன் பாராட்டினார்.


"உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை," எனத் திரு பைடன் 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார்.


அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் ஆகச்சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஜனாதிபதியின் 'Medal of Freedom' விருது வழங்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05