Jan 13, 2025 - 12:19 AM -
0
தெரண - CloseUp 2024 மியூசிக் வீடியோ விருது வழங்கும் விழா அண்மையில் கோல்டன் ரோஸ் ஹோட்டல் வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
9வது முறையாக நடைபெற்ற இந்த மியூசிக் வீடியோ விருது வழங்கும் விழாவில் பல படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஆண்டின் மிகவும் பிரபலமான இசை வீடியோவிற்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் ரசிகர்களின் SMS வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சஞ்சீவ் லோன்லிஸின் 'பிடகவரே' பாடலுக்கான வீடியோவிற்கு தங்க விருது வழங்கப்பட்டது.
அந்தப் பிரிவில் வெள்ளி விருது சரிஸ் மற்றும் சுரித்தின் 'சல்லி சல்லி' பாடலுக்கான வீடியோவுக்கு வழங்கப்பட்டது.
மிகவும் பிரபலமான பிரிவில் வெண்கல விருதை ஃப்ரீஸ் இசைக் குழுவின் 'டயஸ்ஜ் நங்கி' பாடலுக்கான வீடியோ வென்றது.
இதற்கிடையில், இந்த விருது வழங்கும் விழாவில் 8 விருதுகளை வென்ற சானுகா விக்ரமசிங்கவின் 'மோகினி' பாடலுக்கான வீடியோ, ஆண்டின் சிறந்த இசை வீடியோவிற்கான விருதை வென்றது.
மேலும், மோகினி பாடலில் நடித்த ஷாஹிந்தா லக்ஷன் மற்றும் நதாஷா பெரேரா ஆகியோர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர்.
இந்த விருதுகளுடன், மேலும் பல விருதுகள் 'தெரண CloseUp' 2024 மியூசிக் வீடியோ விருதுகள் விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.