வடக்கு
மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Jan 13, 2025 - 03:44 PM -

0

மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு பகுதியில் போயா தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

 

மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும், 165 கால் போத்தல்களும், 72 பியர் போத்தல்களும் இதன்போது கைப்பற்றபட்டது.

 

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக யாழ். மாவட்ட போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

மேலதிக விசாரனையின் பின் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05