செய்திகள்
ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Jan 13, 2025 - 06:26 PM -

0

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் 05  சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

கல்வித் துறையில் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

"அடுத்த மாதம் முதல் பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம், அந்த பட்ஜெட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது." அது தொடர்பில் சந்தேகமே வேண்டாம். மேலும், மூன்றில் இரண்டு, ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து பலர் கேட்கிறார்கள், அதற்கு தேவையான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை தற்போது நடத்தி வருகிறோம். இந்த சம்பள ஏற்றத்தாழ்வு தீர்க்கப்பட வேண்டும்." என்றார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05