செய்திகள்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

Jan 13, 2025 - 06:44 PM -

0

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில்  இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.

 

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

 

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05