வணிகம்
அண்மையில் முடிவடைந்த Colombo Motor Show 2024இல் செலான் வங்கி வெற்றியை பதிவு செய்தது

Jan 14, 2025 - 07:09 AM -

0

அண்மையில் முடிவடைந்த Colombo Motor Show 2024இல் செலான் வங்கி வெற்றியை பதிவு செய்தது

செலான் வங்கி, Colombo Motor Show 2024 உடன் தொடர்ந்து ஏழாவது தடவையாக அதன் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்குதாரராக பெருமிதத்துடன் இணைந்து வாகன ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான நிதிப் பங்காளியாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியது.

டிசம்பர் 6 முதல் 8 வரை BMICHஇல் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60,000இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மோட்டார் தொழில்துறையின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கவுள்ள மின்சார வாகனங்கள் (EVகள்) தொடர்பாக கவனத்தை செலுத்தியதுடன் மோட்டார் தொழில்துறையின் சமீபத்திய போக்குகளை ஆராய்ந்தனர். செலான் வங்கி அதன் Fast Track லீசிங் வசதிகளை அறிமுகப்படுத்தியதுடன் வாடிக்கையாளர்கள் எரிபொருள் அல்லது மின்சாரப் பாவனை உடைய தங்கள் கனவு வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் பெற உதவியது. அதன் சலுகையை மேலும் உயர்த்த, வங்கி சிறப்பு வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணத்தில் 50% தள்ளுபடியை அறிமுகப்படுத்தியது. அத்துடன் வங்கி, அவசரகால பணத் தேவைகளை தடையின்றி வழங்கும் அதன் புதுமையான Speed Drive உடனடி பண வசதியை இந்நிகழ்வின் போது ஊக்குவித்தது.

Asia Exhibition and Conventions Pvt Ltdஆல் தொடர்ச்சியாக 18வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட Colombo Motor Showஇல் மோட்டார் பாகங்கள், உதிரிப் பாகங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதுடன் 200இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக் கூடங்கள் இடம்பெற்றன. பைக் ஸ்டண்ட் மற்றும் பந்தய கார் போட்டிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் நிகழ்விற்கு உற்சாகத்தை சேர்த்தனர்.

பார்வையாளர்கள் செலான் வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்து அதன் பிரபலமிக்க லீசிங் வசதிகளுடன், கடனட்டைகள் மற்றும் சேமிப்பு கணக்குகள் உட்பட பரந்த அளவிலான நிதித் தீர்வுகளை ஆராய்ந்தனர். உங்கள் வாகனக் கனவுகளை முன்னோக்கி நகர்த்த தேவையான லீசிங் தீர்வுகள் மற்றும் நிதி தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, 011-200 88 88 என்ற செலான் வங்கியின் விசேட எண்ணை அழைக்கவும்.

செலான் வங்கி தொடர்பாக

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த வங்கி அனுபவத்தை வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனிநபர் வங்கிச் சேவை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இவ்வங்கி, நாடு முழுவதும் 540ற்கும் மேற்பட்ட அணுகல் புள்ளிகளைக் கொண்டுள்ளது. செலான் வங்கியானது நிதிரீதியாக நிலையான மற்றும் சிறந்த செயற்திறன் மிக்க நிறுவனமாக Fitch Ratings நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-’(lka)வாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவை செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் நிலையான சேவை வழங்கலை உறுதி செய்வதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05