Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடுகள்

Jan 14, 2025 - 10:44 AM -

0

மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடுகள்

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title