Jan 14, 2025 - 02:19 PM -
0
உலக வாழ் இந்து மக்கள் இன்று (14) உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்து மக்களும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா, சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி மற்றும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திளெரபதியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று பொங்கல் பொங்கியனையடுத்து ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.
தைப்பொங்கல் விஷேட பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டதுடன், தங்களுக்குள் பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
புத்தளத்தில் தைப்பொங்கல் தினமான இன்று காலை முதல் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும், மக்கள் தை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--