கிழக்கு
பட்டிப்பொங்கல் தினம்

Jan 15, 2025 - 04:28 PM -

0

பட்டிப்பொங்கல் தினம்

தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கலை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேடமாக பசுக்கள் பட்டு வஸ்த்திரங்கள், பூமாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

 

ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று (15) காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

 

மக்களின் வாழ்வில் ஒன்றர கலந்த பசுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இது கருதப்படுகிறது.

 

இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.

 

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.

 

குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05