Header Logo

கிழக்கு
பல்கலைக்கழகத்தின் முன்னால் விபத்து - 4 பேர் படுகாயம்

Jan 15, 2025 - 04:45 PM -

0

பல்கலைக்கழகத்தின் முன்னால் விபத்து - 4 பேர் படுகாயம்

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவையில் நேற்று (14) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்து பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவை பகுதியில் எதிர்பக்கமாக முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த  தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரும் மூன்று பல்கலை மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள்  உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

--

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title