மலையகம்
மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Jan 15, 2025 - 05:10 PM -

0

மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (15) ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

 

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30 இற்கும் 40 இற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05