ஏனையவை
ஒருதொகை சிறிய சங்குகளுடன் ஒருவர் கைது

Jan 15, 2025 - 05:54 PM -

0

ஒருதொகை சிறிய சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம், கற்பிட்டி - பராமுன கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை சிறிய சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வடமேற்கு கடற்படைக்குச் சொந்தமான விஜய கடற்படையின் விஷேட ரோந்து கப்பல் கற்பிட்டி - பராமுன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, குறித்த கடல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.

 

இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில் 7 சென்றி மீற்றர் அளவு கொண்ட சிறிய அளவிலான சங்குகள் இருந்துள்ளமை அவதானித்துள்ளனர்.

 

குறித்த படகில் 15 உர மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 2137 சிறிய அளவு கொண்ட சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, மண்டலகுடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிறிய சங்குகள், டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடல் தொழில் நீரியவள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05