வடக்கு
இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்

Jan 16, 2025 - 01:51 PM -

0

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்

இரணைமடு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வு இன்று (16) காலை 9 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தலைமையில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

 

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், நீர்பாசன பொறியியலாளர்கள், விவசாய திணைக்களம் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாய பீட மாணவர்கள், விவசாயிகள் என பவர் கலந்து கொண்டனர்.

 

சமய நிகழ்களைத் தொடர்ந்து பிரதான பொங்கல் பானைகள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05