செய்திகள்
மின் கட்டணம் திருத்தப்படுமா?

Jan 16, 2025 - 04:23 PM -

0

மின் கட்டணம் திருத்தப்படுமா?

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்பு இன்றுடன் (17) நிறைவடையும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி முடிவடைந்தது.


குறித்த அமர்வுகளின் போது சுமார் 400 நபர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்தபோது, ​​மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.


அதன்படி, அந்த திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு மின்சார கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை சதவீதமாக இருக்கும்? பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நாளை (17) வெளியிட திட்டமிட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05