Jan 16, 2025 - 06:45 PM -
0
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலக தமிழர் மாநாடு நடைபெற இருக்கிறது என பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார்.
உலகத்தமிழர் மாநாடு தொடர்பாக இலங்கை வாழ் தமிழர்களை தெளிவூட்டும் ஊடகச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தமிழர் மாநாடு 2018 இல் கம்போடியாவில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தி இருந்தோம். இப்பொழுது வியட்நாமில் இரண்டவாது மாநாட்டை 21, 22 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டிற்கு உலகங்கிலும் இருந்து 60 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், போராசிரியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
--