சினிமா
விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது!

Jan 16, 2025 - 07:59 PM -

0

விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது!

இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.


நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக உருவாகியிருக்கும் 'விடாமுயற்சி' ஹாலிவுட் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது.


இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. படம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வெளியாகும் என்று ட்ரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05