Jan 17, 2025 - 10:01 AM -
0
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3 ஆவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு முக்கிய பங்கு வகித்த அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் முழங்கால் காயம் காரணமாக வரும் சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.