Jan 17, 2025 - 12:29 PM -
0
அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று (16) மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது.
குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
--