வடக்கு
இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக் கிராம திறப்புவிழா

Jan 18, 2025 - 10:44 AM -

0

இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக் கிராம திறப்புவிழா

கிளிநொச்சி மாவட்டம் மலையாளபுரம் இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக் கிராம திறப்புவிழா நேற்று (17) இடம்பெற்றது.

 

கரைச்சி பிரதேச செயலக மலையாளபுரம் கிராம சேவகர் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'திருவள்ளுவர் குடியிருப்பு' இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக்கிராமம் நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

 

கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் அவர்கள் கலந்துகொண்டு திருவள்ளுவர் குடியிருப்பு" இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக்கிராம வீடுகளை கையளித்திருந்தார்.

 

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர், கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக்காரியாலய கிளிநொச்சி மாவட்ட காரியாலய  அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05