செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்

Jan 18, 2025 - 10:21 PM -

0

கடந்த 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, இன்று (18) காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பிரதான முனையத்திலிருந்து 2293 கொள்கலன்கள் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், இலங்கை சுங்கத்தால் அகற்றப்பட்டு துறைமுக வாயில்கள் வழியாக விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 2074 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்திற்குள், துறைமுகத்தில் சிக்கியிருந்த குறிப்பிட்ட அளவு கொள்கலன்களை விடுவிக்க துறைமுகம் மற்றும் சுங்கம் உள்ளிட்ட பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், முனையங்களை விட்டு வெளியேறும் அளவை விட வாயில்களில் இருந்து வெளியேறும் அளவு குறைவாக இருப்பதால் கொள்கலன் நெரிசல் குறையவில்லை என்று அரச அதிகாரசபையின் நிர்வாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05