விளையாட்டு
புறம் தள்ளப்பட்ட பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம்

Jan 19, 2025 - 12:41 PM -

0

புறம் தள்ளப்பட்ட பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம்

8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் மார்ச் 9ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில், இந்திய அணி தனது போட்டிகளை டுபாயில் விளையாடவிருக்கிறது.


இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று (18) அறிவித்தது.


குறித்த தொடரில் இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உப தலைவராக சுப்மன் கில்லும் செயற்படவுள்ளனர்.


எனினும், சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஹர்த்திக் பாண்ட்யாவை உப தலைவராக நியமிக்க வேண்டுமென நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தின் போது தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எனினும், அணித்தலைவர் ரோஹித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை உப தலைவராக நியமிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.


நீண்ட நேரம் இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05