Jan 19, 2025 - 01:28 PM -
0
துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்ததாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வேறு எந்த நடிகர் மறுத்திருந்தாலும் கவலையில்லை, சூர்யா மறுத்ததுதான் பெரிய வருத்தத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை இயக்கிய என்னை அவர் நம்பியிருக்கலாம் எனவும் இயக்குனர் கௌதம் மேனன் தனது ஆதங்கத்தை வௌிப்படுத்தியுள்ளார்.