Jan 20, 2025 - 08:25 AM -
0
முன்னணி நிதிசார் நிறுவனங்களுடனான அதன் வெற்றிகரமான வங்கிக் காப்புறுதி கூட்டாண்மையில் மேலதிகமாக RDB இன் விரிவான கிராமிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மைய வாடிக்கையாளர் மையத்திற்கு பொருத்தமாக காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதனை நோக்கிய முக்கிய படியொன்றினை குறிப்பதாக sHNB பொதுக் காப்புறுதியானது பிராந்திய அபிவிருத்தி வங்கியுடனான (RDB) தன்னுடைய மூலோபாய பங்காண்மையை அறிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் முன்னிலையில் RDB இன் தவிசாளர் திரு. லசந்த பெர்ணான்டோ மற்றும் HNB பொதுக் காப்புறுதியின் பிரதம நிறைவேற்றதிகாரி திரு. சிதுமின ஜயசுந்தர ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்டது.
இப்பங்காண்மையின் ஊடாக HNB பொதுக் காப்புறுதியானது குறைவாக கவனம் செலுத்தப்பட்ட கிராமப்பகுதிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைகளிலுள்ள RDB இன் வாடிக்கையாளர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத காப்புறுதித் தீர்வுகளை வழங்கவுள்ளது.
இக்கூட்டாண்மையானது விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்த்துறைகளிலுள்ள தனிநபர்களை வலுப்படுத்தி அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை வளர்த்தெடுக்கும் அணுகக்கூடிய நிதிசார் சேவைகளினூடாக கிராமிய சமுதாயங்களை உயர்த்துவதற்கு RDB இன் எண்ணக்கருவுடன் இணைந்ததாக உள்ளது.
இப்பங்காண்மை குறித்து கருத்துத்தெரிவிக்கையில் HNB பொதுக் காப்புறுதியின் பிரதம நிறைவேற்றதிகாரி திரு. சிதுமின ஜயசுந்தர அவர்கள், “RDB வங்கியானது மதிப்புமிக்கதும் நாடளாவியரீதியில் கிராமிய சமுதாயங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளினை உயர்த்துவதில் தனது அர்ப்பணிப்பிற்கு நன்கறியப்பட்டதாகவும் காணப்படுகின்றது. இப்பங்காண்மையானது தங்களது தேவைகளுக்கென பிரத்தியேகமாக்கப்பட்ட பொருத்தமான பல்வேறுபட்ட காப்புறுதித் தீர்வுகளுடன் பரந்த வாடிக்கையாளர் தளத்தினை அடைய எம்மை அனுமதிக்கின்றது. இது எமது பாதுகாப்பையும் அமைதியான மனிநிலையையும் வழங்குவதில் எம்முடைய அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தும் அதேவேளை எம்மிரு நிறுவனங்களுக்கும் நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கும் கணிசமான பெறுமதியினையும் உருவாக்குகின்றது” என தெரிவித்தார்.
RDB இன் தவிசாளர் திரு. லசந்த பெர்ணான்டோ அவர்கள் “RDB வங்கியில் மிகப் பொருத்தமான நிதிசார் தீர்வுகளை வழங்குவதன் மீது எமது கவனம் எப்பொழுதுமிருக்கும். இக்கூட்டாண்மையானது தற்போதிருக்கும் மிக விரிவான காப்புறுதித் தீர்வுகளுடன் எமது பலமான வங்கியியல் சேவைகளினை பூர்த்திசெய்ய அனுமதிக்கின்றது. கிராமிய மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைகளின் எமது தனித்துவமான வாடிக்கையாளர்களை சென்றடைவதில் இப்பங்காண்மையானது சமுதாயங்களை வலுப்படுத்துவதிலும் பொருளாதார அபிவிருத்தியினை ஆதரிப்பதிலுமான எமது பயணத்தின் முக்கிய மைல்கல்லினை பிரதிபலிக்கின்றது” என மேலும் தெரிவித்தார்.
HNB பொதுக் காப்புறுதி மற்றும் RDB வங்கி போதியளவு சேவைவழங்கப்படாத சமுதாயங்களின் மக்களை வளப்படுத்துவதற்காக தங்களது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தி நிற்கின்றன. தங்களது பலத்தினை ஒன்றிணைப்பதனால் நெகிழ்திறத்தினை வளர்ப்பதிலும் மற்றும் இலங்கை முழுதும் உள்ளடக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலுமாக இரு நிறுவனங்களும் முழுதளாவிய நிதிசார் மற்றும் காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.