வணிகம்
வைத்யஹமுவா நிகழச்சியின் கீழ் 12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்த செலிங்கோ லைஃப்

Jan 20, 2025 - 09:03 AM -

0

வைத்யஹமுவா நிகழச்சியின் கீழ் 12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்த செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் காலியில் உள்ள நெலுவாவில் நடத்திய வைத்யஹமுவா ஜமருத்துவர் சந்திப்புஸ சமூக சுகாதார திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. செலிங்கோ லைஃப் ஆனது இந்த முகாமுடன் சேர்ந்து நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டில் நடத்திய 12 முகாம்களின் மூலம் 2,600 பேர் பயனடைந்துள்ளனர்.

நீண்டகாலமாக செயற்படுத்தப்பட்டு வரும் வைத்யஹமுவா திட்டம் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் 150,000 பேருக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகுவதற்கான வாய்ப்பு மற்றும் நோயறிதல் பரிசோதனைகளை வழங்கியுள்ளதுடன், முன்னர் கண்டறியப்படாத தொற்றா நோய்களுக்கு (NCDs) சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகிறது.

2024 ஆம் ஆண்டு பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, பொலன்னறுவை, புத்தளம், குருநாகல், மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களை நடத்துவதற்காக 2024 ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் ஊழியர்களுடன் மருத்துவக் குழுக்கள் 5,000 கிலோமீற்றர்களுக்கு மேல் பயணித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முகாம்கள் ஒவ்வொன்றிலும், அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சீரற்ற அல்லது உணவருந்தா இரத்த சர்க்கரை பரிசோதனைகள், இரத்த அழுத்தம், ஈசிஜி, சீரம் கொழுப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிறுநீர் சோதனைகள் (CKD) போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலதிகமாக, அவர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) சோதிக்கப்பட்டதுடன் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களால் கண் பார்வை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் ஒவ்வொரு பார்வையாளரும் மருத்துவர் ஒருவரை சந்தித்து பரிசோதனை முடிவுகளைப் பற்றி விவாதிக்கவும் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 58% பெண்களாவர். மேலும் முகாம்களை நடத்திய மருத்துவக் குழுக்கள், இதில் பலர் இதய நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூச்சுக்குழாய் ஆஸ்துமா மற்றும் பங்கஸ் தொற்றுகள் உடன் கூடிய கண்டறியப்படாத ஹைபர்கொலஸ்டிரோலீமியா மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற நோய்களுக்கு ஆட்பட்டிருந்தமை பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளன.

தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.

செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 20 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05