Jan 20, 2025 - 09:38 AM -
0
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்கவுள்ளார்.
கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இதன்போது அடுத்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபயை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் இடையே போட்டி நடைபெற்றது. இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம்.
அதன்படி இன்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வொஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரோபர்ட்ஸ் முன்னிலையில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதிவி ஏற்கவுள்ளார்.
டொனல்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.