விளையாட்டு
சுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு - ஸ்ரீகாந்த் ஆவேசம்

Jan 20, 2025 - 10:34 AM -

0

சுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு - ஸ்ரீகாந்த் ஆவேசம்

ஐசிசி செம்பியன்ஸ்கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பெப்ரவரி 19-ம் திகதி தொடங்கி மார்ச் 9-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் செம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சமீப காலமாக போர்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை தலைவராக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில், சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை தலைவராக ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

 

இந்தியாவின் செம்பியன்ஸ் கிண்ண ஸ்குவாட் தேர்வு குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது: 

 

சுப்மன் கில்லை திடீரென துணை தலைவர் என்று சொல்கிறார்கள்.  6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஓட்டங்கள். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை. 

 

அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணை தலைவராக நியமிக்க வேண்டிய காரணம் என்ன?நல்லவேளை ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ஓட்டங்கள் தான் அடிப்பார். என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.. ஒன்னுமே புரில எனக்கு.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவே தர மாட்டிக்கிறீங்களேசுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்கள். 

 

சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன் இருக்கிறார். அதே போல இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சஞ்சு சாம்சனை நான் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்ய ஆதரவு கொடுப்பேன்.

 

கில் என்ன செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஆனால் சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? ஆஸ்திரேலிய மண்ணில் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடியதால் ஹீரோ போல காண்பித்தீர்கள். 

 

தற்போது இத்தொடரில் தகுதி இருந்தும் தேர்வு செய்யாத நீங்கள் அவரை திடீரென கீழே போட்டுள்ளீர்கள். 

 

சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05