வணிகம்
‘Adopt an Ambulance’ முன்முயற்சிக்காக Hemas Pharmaceuticals, 1990 சுவ செரிய அறக்கட்டளையுடன் கைகோர்க்கிறது

Jan 20, 2025 - 05:49 PM -

0

‘Adopt an Ambulance’ முன்முயற்சிக்காக Hemas Pharmaceuticals, 1990 சுவ செரிய அறக்கட்டளையுடன் கைகோர்க்கிறது

Hemas Pharmaceuticals 1990 சுவ செரிய அறக்கட்டளையின் Adopt an Ambulance முன்முயற்சிக்கு ரூ.10 மில்லியனை நன்கொடையாக வழங்கி இரண்டு அம்புலன்ஸ்களுக்கு நிதியளித்தது. மொரட்டுவ மற்றும் பேலியகொட பிரதேசங்களுக்குள் இயங்கவுள்ள இந்த அம்புலன்ஸ்கள் உடனடி மருத்துவ உதவிக்கான சமூக அணுகலை விரிவுபடுத்தும் அதே வேளை வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பிற்கு வளங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும். 

Hemas Pharmaceuticals, 1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்ததன் மூலம் அவசரகால சேவைகளுக்கான அணுகலை இலகுபடுத்தி சுகாதார அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி அம்புலன்ஸ்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல், பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், சீருடை கொள்முதல், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பராமரிப்பு ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது. 

1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடையைப் பற்றி கருத்துத் தெரிவித்த Hemas Pharmaceuticals (Pvt) Ltdஇன் நிர்வாக இயக்குனர் ஜூட் பெர்னாண்டோ, "தொழில்துறையில் முன்னணி வர்த்தகநாமமாக, 1948ஆம் ஆண்டு முதல் 76 வருடங்களாக நாட்டுக்கு மருந்துகளை விநியோகித்து வரும் Hemas Pharmaceuticals இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. தேசத்தின் கூட்டு நல்வாழ்விற்கு ஆதரவு அளிப்பதிலும் பாதுகாப்பதிலும் 1990 சுவ செரிய அறக்கட்டளையின் முயற்சிகள் முக்கிய பங்கு ஆற்றுவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். பகிரப்பட்ட இலக்குகளைக் கொண்ட குழுவாக, இலங்கையின் சுகாதார அமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு அறக்கட்டளையின் பங்களிப்பை ஆதரிக்க Hemasஇல் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பயனுள்ள மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை பெறுவதற்கான உலகளாவிய உரிமையை எடுத்துக்காட்டும் ஒரு முன்முயற்சியின் தொடர்ச்சிக்கு நிதியுதவி செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார். 

“Hemas Pharmaceuticals, 1990 சுவ செரியவுக்கான நன்கொடையினூடாக, இரு நோயாளர் காவு வண்டிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக நோயாளர் காவு வண்டி பராமரிப்பு சேவை தேவையை கொண்டிருப்போருக்கு மிகவும் பயனளிப்பதாக அமைந்திருக்கும். இந்த ஆதரவினூடாக, உரிய நேரத்தில் வினைத்திறனான பராமரிப்பை பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்துக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.” என சுவ செரிய பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டி சில்வா தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05