வணிகம்
அதானி குழும நிறுவனங்கள் மூலோபாய விரிவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியுடன் புதிய உயரங்களை எட்டுகின்றன

Jan 20, 2025 - 05:52 PM -

0

அதானி குழும நிறுவனங்கள் மூலோபாய விரிவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியுடன் புதிய உயரங்களை எட்டுகின்றன

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் துறைகளில் அதானி குழும நிறுவனங்கள், செயற்பாட்டுச் சிறப்பு, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய விரிவாக்கத்திற்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி புதுமையை உருவாக்குகின்றன. 

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) குறிப்பிடத்தக்க திறன் சேர்க்கையுடன் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தலைவராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக நிலையான எரிசக்திக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் முகமாக பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. புதிதாக செயற்பாட்டுக்கு வந்த திட்டங்களில் குஜராத்தின் கவ்டாவில் 62.4 MW காற்றாலை-சூரிய மின்சக்தி கலப்புத் திட்டம், குஜராத்தின் கவ்டாவில் 112.5 MW சூரிய மின்சக்தி திட்டம் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூரில் 250 MW சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவை உள்ளடங்கும். 

இந்த திட்டங்கள் AGELஇன் மொத்த செயற்பாட்டு புதுப்பிக்கத்தக்க உற்பத்தித் திறனை 11,608.9 MWஆக உயர்த்தியுள்ளதுடன் 2030ஆம் ஆண்டுக்குள் 50 GWஐ அடையும் அதன் இலட்சிய இலக்கை நோக்கி நகர உதவியுள்ளது. எரிசக்தி மூலத்தின் வாழ்நாளில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவை (Levelized Cost of Energy) குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிறுவனத்தின் கவனமானது தூய்மையான சக்தியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. 

2025ஆம் ஆண்டிற்கான திட்டமிடலின் போது உலகளாவிய விரிவாக்கத்திற்கான AGELஇன் தொலைநோக்கை பிரதிபலிக்கும் வகையில் டிசம்பர் 2024இல் அறிவிக்கப்பட்ட பல மூலோபாய தலைமைத்துவ நியமனங்கள் அமைந்தன. SLBஇல் (முன்னர் Schlumberger) பரந்த சர்வதேச அனுபவமும், எரிசக்தி மாற்றத்தில் நிபுணத்துவமும் கொண்ட அமித் சிங், சர்வதேச எரிசக்தி வணிகத்தை வழிநடத்துவார். அவரது நியமனம் குறிப்பாக MENA பிராந்தியத்தில் குழுமத்தின் விரிவாக்கத் திட்டங்களை பலப்படுத்துகிறது. அதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஆஷிஷ் கன்னா, ஏப்ரல் 2025 முதல் AGELஇன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிலையான நடைமுறைகளுக்கான குழுமத்தின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில், AGEL 200 MW இற்கும் மேற்பட்ட திறன் கொண்ட ஆலைகளுக்கு நீர் நேர்மறை பிளாஸ்டிக் அற்ற ஒற்றைப் பயன்பாடு மற்றும் நிலநிரப்பல்களுக்கு பூச்சிய கழிவு' ஆகியவற்றிற்கு சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த சாதனைகள் பொறுப்பான நிறுவன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்கான அதானியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) டிசம்பர் 2024இல் 38.4 MMT சரக்குகளை கையாண்டு, 8% வருடாந்த வளர்ச்சியை அடைந்து அதன் சிறப்பான பாதையை தொடர்கிறது. கொள்கலன் அளவுகளில் (22% YoY) மற்றும் திரவங்கள் மற்றும் வாயுவில் (7% YoY) ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இந்த அற்புதமான செயல்திறனுக்கு உந்துதலாக அமைந்தது. ஆண்டு முதல் இன்று வரையிலான புள்ளிவிவரங்கள், வலுவான போக்குவரத்து ரயில் அளவுகள் 0.48 Mn TEUகள் மற்றும் 16.1 MMTஐ எட்டிய GPWISஇன் ஆதரவுடன் மொத்த சரக்கு கையாளப்பட்டதில் 332.4 MMT உடன் நிலையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. 

ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய நடவடிக்கையாக, அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்டின் முழு உரிமமுள்ள அதன் துணை நிறுவனமான அதானி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (APCL), தாய்லாந்தின் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உடன் 50:50 கூட்டு நிறுவனமாக இணைந்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனமான வேலர் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (VPL), சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் மற்றும் இரசாயனத் துறைகளில் இருப்பை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணைவு, சர்வதேச கூட்டாண்மைகள் ஊடாக புதிய வணிகப் பிரதேசங்களில் தம்மை விரிவுபடுத்தி வளர்ச்சியை அடைவதற்கான அதானி குழுமத்தின் மூலோபாய நகர்வை எடுத்துக் காட்டுகின்றது. ஊடக அறிக்கைகளின்படி, இந்த கூட்டு நிறுவனம் 3.2MTPA திறன் கொண்ட ஒரு ஆலையை அமைப்பதில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும். தாய் நிறுவனமான APCL, 2026ஆம் ஆண்டில் செயற்பாட்டுக்கு வரும் வகையில் தனியாக 2MTPA PVC ஆலையை அமைத்து வருகிறது. 

மற்றொரு மேம்பாட்டில், குழுமத்தின் எரிசக்தி பரிமாற்றப் பிரிவான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், மிகவும் சிக்கலான மற்றும் மூலதன தீவிர HVDC (உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம்) உட்கட்டமைப்பை உள்ளடக்கிய பில்லியன் டொலர் மெகா சக்திப் பரிமாற்றத் திட்டத்தை வென்றுள்ளது. இது இன்றுவரையான காலப்பகுதியில் நிறுவனம் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய திட்ட வெற்றியாகும். இந்தத் திட்டம் செயற்பாட்டுக்கு வந்ததும், இந்தியாவின் மேற்கில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவிலிருந்து 20GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வடக்கில் உள்ள தேவை மையத்துடன் இணைப்பதன் மூலம் வெளியேற்ற உதவும். 

விரிவாக்கம் மற்றும் சர்வதேச இருப்பை வலுப்படுத்துவதன் மூலம், அதானி குழுமம் வலுவான செயற்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தி வரும் அதே நேரத்தில் செயற்பாட்டு சிறப்பைப் பேணி, வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிலையை உருவாக்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05