வணிகம்
மகா பருவ காலத்தில் புதிய உயர் செயல்திறன் கொண்ட டிராக்டர் டயரை சியெட் வெளியிட்டது

Jan 20, 2025 - 06:06 PM -

0

 மகா பருவ காலத்தில் புதிய உயர் செயல்திறன் கொண்ட டிராக்டர் டயரை சியெட் வெளியிட்டது

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது விவசாயத் துறையின் அபிவிருத்தியில் தனது பங்களிப்பினை வெளிப்படுத்தும் வகையில், மகா கால பயிர்ச்செய்கைப் பருவத்தின் அறுவடைகால கட்டத்தில், புதிய உயர் செயல்திறன் கொண்ட உழவு இயந்திரத்திற்கான ஜடிராக்டர்ஸ விசேட டயரினை அறிமுகப்படுத்தியுள்ளது. 13.6 - 28 PUDDLE XL TT 12PR எனப் பொருத்தமாக குறியிடப்பட்டிருக்கும் இந்த புதுமையான குறுக்கு-பட்டை டயரானது விவசாய டிராக்டர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் விவசாயம் மற்றும் டிராக்டர் செயல்பாடுகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டு திகழ்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய டயரானது பிரபலமான டிராக்டர் வர்த்தகநாமங்களான Sonalika, TAFE, John Deere மற்றும் Mahindra போன்றவற்றுடன் இணக்கமாக உள்ளதுடன் பல்வேறு விவசாய தேவைகளுக்கும் பல்துறை தெரிவாக உள்ளது. இந்த டயரானது கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சறுக்கல் தன்மை குறைந்த ஆழத்தை (NSD) கொண்டுள்ளது, புதிய டயர் பயிர்ச்செய்கை செயல்பாடுகளின் போது ஒப்பிட முடியாத செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அகலமான மற்றும் கோண வடிவுடைய லக்குகள் சேறு அல்லது ஈரமான நிலைகளில் விதிவிலக்கான இழுக்கும் தன்மையை வழங்குகின்றன, அதே நேரத்தில்உயர் லக் ஆனது இணைப்பு பட்டி செயல்பாட்டின் போது மேம்பட்ட நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. அதன் ஆழமான மற்றும் திறந்த வடிவமைப்பானது சிறந்த சுய-சுத்தம், நிலையான செயல்திறனுக்கான உறுதி, மற்றும் வலுவூட்டப்பட்ட கட்டுமானம் மற்றும் நீண்ட காலத்துக்கு நீடித்து நிற்கும் சேவையை வழங்குவதுடன் பயனாளிகளுக்கு அதிகபட்ச பெறுமதியை வழங்குகிறது. 

13.6 - 28 PUDDLE XL TT 12PR ஆனது சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஆறாவது டிராக்டர் டயர் வகையாகும். நிறுவனத்தின் விவசாய டயர் வரிசையில் இந்த சமீபத்திய சேர்க்கை குறித்து கருத்து தெரிவித்த சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு ஷமல் குணவர்தன, குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட நிலைமைகளின் போது மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டிற்காக டயர்களை வடிவமைக்கும் சியெட்டின் திறனுக்கு புதிய டயர் சிறந்த எடுத்துக்காட்டு என்றார். அறுவடை காலத்தில் ஏற்படும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதன் மூலம், டயரானது மேம்பட்ட செயல்திறன், ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது, சிறந்த உற்பத்தி மற்றும் செயல்திறனை அடைய விவசாயிகள் மற்றும் டிராக்டர் இயக்குனர்களை மேம்படுத்துகிறது, என்று அவர் கூறினார். 

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்பு நிலையிலிருந்து விடுவிற்;பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05