வணிகம்
அமானா வங்கி இலங்கையில் கண்டதாவர கட்டமைப்பை மீள நிறுவுவதற்காக பயோடைவர்சிட்டி ஸ்ரீ லங்காவுடன் கைகோர்ப்பு

Jan 20, 2025 - 06:39 PM -

0

அமானா வங்கி இலங்கையில் கண்டதாவர கட்டமைப்பை மீள நிறுவுவதற்காக பயோடைவர்சிட்டி ஸ்ரீ லங்காவுடன் கைகோர்ப்பு

புத்தளம் மாவட்டத்தில் “கண்டல்தாவரங்களுக்கு உயிரூட்டல்” திட்டத்துக்காக பயோடைவர்சிட்டி ஸ்ரீ லங்கா (BSL) அமைப்புடன் கைகோர்த்துள்ளதாக அமானா வங்கி அறிவித்துள்ளது. அதனூடாக, நிலைபேறாண்மை மற்றும் உயிரியல் பாதுகாப்பு போன்றவற்றுக்கான வங்கியின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டல்தாவர சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பது மற்றும் மீளமைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதுடன், கரையோர பாதுகாப்பு, உயிரியல் பரம்பல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. 

கரையோர மண் அரிப்புக்கு எதிரான இயற்கையான அரணாக கண்டல் தாவரங்கள் அமைந்திருப்பதுடன், கரையோரப் பிரதேசத்தை அண்டி வாழும் உயிரினங்களுக்கு வசிப்பிடத்தையும், காபன் தக்க வைக்கும் பகுதிகளாகவும் அமைந்துள்ளன. “கண்டல்தாவரங்களுக்கு உயிரூட்டல்” திட்டத்தினூடாக, அமானா வங்கி மற்றும் BSL ஆகியன இந்த அத்தியாவசிய சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதுடன், உள்நாட்டு சமூகத்தாருக்கு அதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வூட்டுவதில் கவனம் செலுத்தப்படும். ஆனவிழுந்தாவ ஈரநில சரணாலயத்தில் சேதமடைந்துள்ள கண்டல்தாவர கட்டமைப்பை மீள நிறுவுவதற்கு இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. ரம்சார் மாநாட்டு தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் காணப்படும் ஆறு ஈர நிலங்களில் ஒன்றாக இது அமைந்திருப்பதுடன், காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தணித்துக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்கின்றது. 

ஆனவிழுந்தாவ சரணாலயத்தில் ஆதிகால குளங்கள் காணப்படுவதுடன், இதில் அரிய வகை மீனினங்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர், நில வாழினங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. புலம்பெயர் பறவைகளுக்கும், நன்னீர் மீனினங்களுக்கும் முக்கியமான சரணாலயமாக இப்பகுதி அமைந்திருப்பதுடன், இவற்றில் ஆகக்குறைந்தது அழிந்துவிடும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள மூன்று உயிரின வகைகள் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ள இதர பங்காளர்களில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (DWC) மற்றும் வயம்ப பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆகியனவும் அடங்கியுள்ளன. 

இந்தப் பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சூழல் மற்றும் சமூகங்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அமானா வங்கி தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளது. எமது மக்கள் மற்றும் புவிக்கு நட்பான வங்கியியல் மாதிரி என்பதற்கமைய வழிநடத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் எனும் எமது பிரதான பெறுமதிகளுடன் பொருந்துவதாக “கண்டல்தாவரங்களுக்கு உயிரூட்டல்” திட்டம் அமைந்திருப்பதுடன், இலங்கையின் பிரத்தியேகமான சூழல் கட்டமைப்புகளை பேணி, மீளமைப்பதில் நாம் கவனம் செலுத்தி, காலநிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய வழியை ஏற்படுத்துகின்றோம். பயோடைவர்சிட்டி ஸ்ரீ லங்காவுடனான இந்த கைகோர்ப்பினூடாக, இயற்கை பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவதற்கு எமக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.” என்றார். 

திட்டத்துக்கு அமானா வங்கியை வரவேற்று, பயோடைவர்சிட்டி ஸ்ரீ லங்கா பணிப்பாளர் சபை தலைவர் தில்ஹான் சி. பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “கண்டல்தாவரங்களுக்கு உயிரூட்டல்” திட்டத்துக்கு அமானா வங்கியை எம்முடன் இணைத்துக் கொள்வதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் உயிரியல் பரம்பலை பாதுகாப்பது மற்றும் கரையோர சமூகங்களுக்கு வலுவூட்டுவது போன்ற எமது பகிரப்பட்ட இலக்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படியாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. நிலைபேறான அபிவிருத்திக்கு அமானா வங்கியின் அர்ப்பணிப்பினூடாக, பெறுமதி வாய்ந்த வங்கியியல் பங்காளராக திகழச் செய்துள்ளதுடன், எமது பெறுமதி வாய்ந்த கண்டல்தாவர சூழல்கட்டமைப்புகளை பாதுகாத்து மீளநிறுவுவதில் இணைந்து செயலாற்ற நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஸ்ரீ லங்காவினால் அமானா வங்கியின் தேசிய நீண்ட கால BB+(lka) தரப்படுத்தல், BBB- (lkr)எனும் முதலீட்டு தர தரப்படுத்தலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், உறுதியான தோற்றப்பாட்டையும் வழங்கியுள்ளது. அதனூடாக, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கான பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05