செய்திகள்
அர்ச்சுனா எம்.பி பொலிஸாருடன் வாக்குவாதம்

Jan 21, 2025 - 10:07 AM -

0

அர்ச்சுனா எம்.பி பொலிஸாருடன் வாக்குவாதம்

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரினர்.


இதன்போது ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரியவருகிறது.


மேலும் இன்று (21) காலை பாராளுமன்றத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05