வணிகம்
தமது சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தும் இரத்மலானை Queen’s Hospital

Jan 21, 2025 - 01:47 PM -

0

தமது சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தும் இரத்மலானை Queen’s Hospital

இரத்மலானை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய Queen’s Hospital Medical Centre மருத்துவமனை தனியார் மருத்துவச் சேவைத் துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ட்ரா சவுன்ட், எக்கோ, எக்ஸ்ரே போன்ற மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்களை கொண்ட மேற்படி மருத்துவமனை நோயாளர்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு பயன் தரும் சிகிச்சைகளை பெறுவதற்கு ஏதுவாக சீரான மருத்துவப் பரிசோதனை பெறுபேறுகளை உறுதிப்படுத்துகிறது. 

உயர் தரத்திலான நோயாளர் சிகிச்சைச் சேவைகளை வழங்கும் மேற்படி மருத்துவமனையானது, திறமையும் அனுபவமும் கொண்ட மருத்துவர்கள், ஆற்றல் மிக்க தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் இதர சுகாதார சேவை பணியாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வெறும் 550 ரூபாய் என்ற நியாயமான கட்டணத்தில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை பல்வேறு பிரிவுகளுக்கு 25% விலைக் கழிவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமக்குள்ள நிறுவனம் சார் பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை சிறப்பு மருத்துவ முகாமொன்றை நடாத்துவதற்கும் மேற்படி மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் போது இங்கு கொலஸ்ட்ரோல், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த நோய்களை அடையாளங் காண்பதற்கு உதவும் மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதில் பங்கெடுத்து பயன்பெற விரும்புவோருக்கு விரைவில் பதிவு செய்துகொள்ளுமாறு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதில் பங்கேற்போரின் நோய்களை அடையாளங் கண்டு அவர்களை உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஆற்றுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். தற்போதைய சூழலில் குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள சவால்களை கவனத்தில் கொண்டு Queen’s Hospital வயோதிப பெற்றோர்களுக்கு நாள் பராமரிப்பு (Day Care) சேவையொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் சுற்றுலா பயணத்தின் போதோ தொழிலுக்கு செல்லும் போதோ பிள்ளைகளுக்கு தமது பெற்றோரை மருத்துவ மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பானதும் சிநேகபூர்வமானதுமான சூழலில் இங்கு தங்க வைத்துச் செல்ல முடியும். இரத்மலானை, களுத்துறை, தெஹிவளை, மொரட்டுவை, கட்டுபெத்த, மஹரகம, அத்திடிய,பிலியந்தலை போன்ற பகுதிகளில் வசிக்கும் நோயாளர்களுக்கு இனியும் உயர் தரத்திலான சிகிச்சைகளை எதிர்பார்த்து கொழும்புக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. eசேனலின் சேவை ஊடாக தமக்கு தேவையான மருத்துவரை தெரிவு செய்து Queen’s Hospital இற்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு நோயாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதோடு அதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்திக்கொள்ள முடியும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05