வணிகம்
DFCC வங்கி, களனி பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தொழில் புரிபவர்களுக்கான குழுமட்ட கலந்துரையாடல் நிகழ்வில் இணைந்துள்ளது

Jan 21, 2025 - 01:52 PM -

0

DFCC வங்கி, களனி பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தொழில் புரிபவர்களுக்கான குழுமட்ட கலந்துரையாடல் நிகழ்வில் இணைந்துள்ளது

பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் சமூகத்தில் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் இலங்கையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கி, களனி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த “How to be a Successful Freelancer” (வெற்றிகரமான பகுதி நேர தொழில் புரிபவராக மாறுவது எப்படி) என்ற குழுநிலை கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு நிதியியல் முகாமைத்துவம் குறித்த கண்ணோட்டத்தை வழங்கி, பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இலங்கையில் வழங்கப்படும் ஒரேயொரு நிதிச் சேவையான DFCC Freelancer தீர்வு குறித்தும் விளக்குவதற்காக வங்கி அழைக்கப்பட்டிருந்தது. பல்வகைப்பட்ட சேமிப்பு மற்றும் பரிவர்த்தனை வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் சேவைகளுக்குப் புறம்பாக, கடன் தகுதியை மதிப்பீடு செய்யும் வலுவான புதிய கட்டமைப்பொன்றை உள்வாங்கி, முதல்முறையாக பல்வகைப்பட்ட கடன் சேவைகளை பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் அணுகுவதற்கும் DFCC Freelancer இடமளிக்கின்றது. டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்திற்கான உதவி உப தலைவர் பிரதீபன் சிவலிங்கம் அவர்கள் இக்குழுவில் DFCC வங்கியை பிரதிநிதித்துவம் செய்தார். 

தனிநபர் மற்றும் வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு கவர்ச்சியான வட்டி வீதங்களை DFCC Freelancer வழங்குவதுடன், சராசரி வருமானத்தின் அடிப்படையில் DFCC Pinnacle, Prestige, Salary Partner, அல்லது Salary Plus ஊடாக பிரத்தியேகமான வரப்பிரசாதங்களுடன், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களையும் வழங்குகின்றது. வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளுக்கு பிரத்தியேக 2% cashback சலுகை மற்றும் வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுடன், கணக்குதாரர்கள் இணையும் சந்தா கட்டணத்திற்கான விலக்குடன், DFCC வங்கி மாஸ்டர் காட் கடனட்டையையும் பெற்றுக்கொள்வர். பகுதி நேர தொழில் புரிகின்ற மகளிர் DFCC ஆலோக மூலமாக தனித்துவமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்கு மனநிம்மதியளிக்கும் வகையில் பல்வகைப்பட்ட, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டங்களும் கிடைக்கப்பெறுகின்றன. 

DFCC வங்கி பற்றிய விபரங்கள் 

DFCC வங்கியானது 70 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand மற்றும் Euromoney இன் Market Leader and Best in Service in Cash Management 2022 உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. 

நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund - GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05