வடக்கு
போலி ஆவணம் தயாரித்து அரச காணி விற்பனை: அரச உத்தியோகத்தர் கைது

Jan 21, 2025 - 02:01 PM -

0

போலி ஆவணம் தயாரித்து அரச காணி விற்பனை: அரச உத்தியோகத்தர் கைது

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.


இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05