கிழக்கு
வெள்ள நீரில் மூழ்கிய கிட்டங்கி வீதி

Jan 21, 2025 - 07:59 PM -

0

வெள்ள நீரில் மூழ்கிய கிட்டங்கி வீதி

கிட்டங்கி வீதியில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.

 

கல்முனை, நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று (21) போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு  நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த  முகாமைத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ