Jan 22, 2025 - 07:21 AM -
0
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் பென் வெய்கியு (வயது 62). இவர் கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றார். அந்த நேரத்தில் மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் வெய்கியுவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை நீதிமன்றம் நிறைவேற்றி உள்ளது.