கிழக்கு
விளக்குமாற்றுடன் பொதுமக்கள் போராட்டம்

Jan 22, 2025 - 10:22 AM -

0

விளக்குமாற்றுடன் பொதுமக்கள் போராட்டம்

அம்பாறை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (21) பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபானசாலையை அப்பொழுது மூடினார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது. எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

 

பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜிடம் மகஜர் ஒன்றினை வழங்கினர். பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05