சினிமா
ஆன்ட்டி-ன்னு கூப்பிட்ட 19 வயது நடிகை!

Jan 22, 2025 - 12:01 PM -

0

ஆன்ட்டி-ன்னு கூப்பிட்ட 19 வயது நடிகை!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை தமன்னா. நடிப்பை தாண்டி தன்னுடைய கிளாமர் ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

 

இந்நிலையில், சாது, ஆளவந்தான், கேஜிஎஃப் 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரவீணா டாண்டனின் மகள் ராஷா ததானி ஆசாஅத் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில் நடிகை தமன்னா தனக்கு வளர்ப்பு தாய் போன்றவர் என்று கூறியிருந்தார்.

 

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னாவை 19 வயதான ராஷா ததானி, ஆன்ட்டி என்று அழைத்துள்ளார். அவர் ஆன் ட்டி என்று அழைத்ததும் தமன்னா அதிர்ச்சியாகி, அவர் தோள் மீது லேசாக தட்டி, ஆன்ட்டின்னுலாம் சொல்லக்கூடாது என்று செல்லமாக கண்டித்துள்ளார். தற்போது இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05