வடக்கு
இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகள் திறப்பு!

Jan 22, 2025 - 01:29 PM -

0

இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது.

 

அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

 

இதே வேளை இரணைமடு குளம் வான்பாய்ந்து வருவதுடன், குளத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

 

கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் உள்ளிட்ட நீர்பாசனக் குளங்களும் வான்பாய்ந்து வருகிறது. இதனால் வெளியேறும் வெள்ள நீரும் மக்கள் குடியிருப்புக்கள், உள்ளக வீதிகளை கடந்து செல்கின்றது.

 

வெள்ளம் வடிந்தோடும் நிலையில் கண்டாவளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும், குளங்களை பார்வையிடும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05