Jan 22, 2025 - 10:42 PM -
0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனான அண்ணன் வீட்டிற்கு இன்று (22) காலை சென்ற தம்பி, அவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில் அண்ணன் உயிரிழந்ததுடன், தம்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பிறைந்துறைச்சேனை சாதுலியா பாடசாலை வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு சகோதர்களுக்கிடையே ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் முரண்பாட்டையடுத்து சகோதரனின் வீட்டிற்கு சம்பவதினமான இன்று காலை 9.30 மணிக்கு சென்ற தம்பி, அண்ணன் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடாத்தயதையடுத்து அவர் படுகாயமடைந்ததார்.
பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், தாக்குதலை நடாத்திய தம்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.