Jan 23, 2025 - 10:23 AM -
0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பட்டனர்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
--