Jan 23, 2025 - 01:11 PM -
0
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் மொத்தம் 25,000 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வோடு கையெழுத்திட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி எனக் தெரிவித்தனர்.
--