மலையகம்
தேயிலை மலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

Jan 23, 2025 - 04:16 PM -

0

தேயிலை மலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் நேற்று (22) சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்

 

குறித்த தோட்ட மக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

இந்த சிறுத்தை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக நல்லதண்ணி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.

 

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05