விளையாட்டு
இந்திய U19 மகளிர் அணி அபார வெற்றி

Jan 23, 2025 - 04:26 PM -

0

இந்திய U19 மகளிர் அணி அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணியுடன் கோலாலம்பூரில் இன்று (23) இடம்பெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 60 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


பின்னர், 119 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.


இந்த வெற்றியின் ஊடாக குழு A புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05