Jan 23, 2025 - 09:42 PM -
0
நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் இன்று (23) ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பதியொன்று நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--