வணிகம்
NDB வங்கி TradeLinc யை அறிமுகப்படுத்துவதன் மூலம் விநியோகிக்ச் சங்கிலி நிதியியலில் புரட்சியை ஏற்படுத்துகிறது

Jan 24, 2025 - 02:33 PM -

0

NDB வங்கி TradeLinc யை அறிமுகப்படுத்துவதன் மூலம் விநியோகிக்ச் சங்கிலி நிதியியலில் புரட்சியை ஏற்படுத்துகிறது

NDB வங்கியானது, இலங்கையில் முதன்முறையாக,விநியோகச் சங்கிலி நிதிக்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட தளமான TradeLinc ஐ அறிமுகப்படுத்துவது தொடர்பாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் வங்கியியல் புத்தாக்கங்களில் அதன் முன்னணி ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. , NDB வங்கியானது TradeLinc உடன் நிதியியல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது, அத்துடன் இலங்கையின் பெரு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஊடக பங்காளர்களுக்கு வலுவூட்டுவதற்கும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை உந்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட பொருத்தமான தீர்வுகளை வழங்குகிறது. 

முழுவதுமாக NDB இன் உள்ளகக் குழுவால் உருவாக்கப்பட்ட TradeLinc ஆனது இலங்கையின் தனித்துவமான சந்தை இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை உள்ளடக்கியது. சர்வதேச தளங்களைப் போலன்றி, இலங்கை வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களை TradeLinc நிவர்த்தி செய்கிறது, முழு டிஜிட்டல் மயமாக எப்போதும் 24/7 என்ற ரீதியில் இயங்கும் தளமாக விநியோகச் சங்கிலி நிதியுதவிக்கான செலவு குறைந்த மற்றும் நெகிழ்வான தீர்வை வழங்குகிறது. இது வர்த்தக முயற்சிகளுக்கு நிகழ்நேர நிதியுதவிக்கான இணையற்ற அணுகலை வழங்குகிறது, அத்துடன் நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்புடன் பணப்புழக்க சவால்களை வழிநடத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 

விநியோகச் சங்கிலி நிதியியலுக்கான TradeLinc இன் புதுமையான அணுகுமுறை ஏற்கனவே தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, இதற்கிணங்க இந்த அங்கீகாரத்திற்கான விருதானது மதிப்புமிக்க தேசிய சிறந்த தர மென்பொருள் விருதுகளில் (NBQSA) வழங்கப்பட்டது. உலகளாவிய போட்டித்தன்மையைப் பேணுவதன் மூலம் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதில் NDB வங்கியின் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரமானது வெளிப்படுத்துகிறது. 

TradeLinc ஆனது விநியோகச் சங்கிலித் தெரிவுநிலையை மேம்படுத்துவதன் மூலமும், விநியோகஸ்தர்கள் மற்றும் பெருநிறுவன பங்காளர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், வர்த்தகங்களுக்கு மாற்றமான அனுபவத்தை வழங்குகிறது. அதன் நிகழ்நேர நுண்ணறிவு வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் தளத்தின் பணப்புழக்கத்தில் கவனம் செலுத்துவதால், நிறுவனங்கள் தாமதமின்றி வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான செயல்பாட்டு மூலதனத்தையும் உறுதி செய்கிறது. 

TradeLinc ஆனது பெருநிறுவன மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான [SME] வளர்ச்சியை வலுப்படுத்தும் NDB வங்கியின் பரந்த நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த தளமானது நிதி செயல்முறைகளை எளிதாக்குவதன் மூலமும், செயல்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலமும், போட்டி மிக்க சந்தையில் செழித்து வளர்வதற்கான அனைத்து அளவிலான வர்த்தகங்களையும் வழங்குகிறது. இந்த முன்முயற்சியானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய செயலாளராக NDB வங்கியின் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது, மேலும் இணைக்கப்பட்ட மற்றும் திறமையான நிதியியல் நிலப்பரப்புக்கான நாட்டின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த புதுமைகளை ஊக்குவிக்கிறது. TradeLinc தளத்தை ஆரம்பித்ததன் மூலம் , NDB வங்கியானது நிதியியல் தீர்வுகளை மறுவரையறை செய்வதிலும், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இலங்கை தனது டிஜிட்டல் மாற்றப் பயணத்தைத் தொடங்கும் இத்தருவாயில் அந்த அம்சத்தில் NDB வங்கியானது முன்னணியில் உள்ளது, இது இன்று பொருத்தமானதாக திகழ்வதுடன் மட்டுமல்லாது நாட்டின் வர்த்தகங்களுக்கான நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒருங்கிணைந்த தீர்வுகளையும் வழங்குகிறது. 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05