வடக்கு
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Jan 24, 2025 - 03:37 PM -

0

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

15 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று (24) ஆரம்பமானது.

 

இன்று காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை(25) மற்றும் நாளை மறுதினம் (26) ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது.

 

காலை 09:30 யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் வாசுதேவன் ராசையா, யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிர்வாக இயக்குனர் கே.விக்னேஷ், அனுசரணையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05