வடக்கு
வத்திராயன் கடலில் பரபரப்பு - உயிருக்கு போராடியவர் வைத்தியசாலையில் அனுமதி

Jan 25, 2025 - 05:08 PM -

0

வத்திராயன் கடலில் பரபரப்பு - உயிருக்கு போராடியவர் வைத்தியசாலையில் அனுமதி

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று (25) காலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட வேளை சம்பந்தப்பட்ட இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதன்போது வின்சன் பெனடிட் என்பவரின் படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி மூழ்கடிக்க முனைந்துள்ளார்கள்.

 

படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட வின்சன் பெனடிட் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் அவருடன் தொழிலுக்கு சென்ற மீனவரால் காப்பாற்றப்பட்டார்.

 

காயங்களுடன் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகள் இடம்பெற்றுவருதுடன் மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்றவேளை ஊடகவியலாளர்களுக்கு பார்வையிட அனுமதி கடமையில் இருந்த வைத்தியரால் மறுக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05