Jan 26, 2025 - 11:28 AM -
0
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி-கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்னதானம் கொடுப்பதற்காக கரிக்கடடைப் பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்களில் சென்றவர்களின் பின்னால் சிலாபத்தில் இருந்து பாலாவி நோக்கி மீன் ஏற்றிச் சென்ற லொறி மோதி மோட்டார் சைக்களின் பின்னால் இருந்து சென்ற 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் ஓட்டிச் சென்றவர் சிறுகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--